படம் பார்த்து கவி: கர்வம்

by admin 2
42 views

அலுங்காமல் புள்ளி வைத்து
அலையலையாய் அதை இணைத்து
அழகாய் கட்டமைத்தவள்
அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்
அலங்காரம் பூண்ட வாசல்
அன்பாய் உரைத்த நன்றியில்
அரும்புகிறது அவளிதழ்
அமைதியான கர்வத்தில்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!