கருப்புக் கண்ணாடி
பார்வையை காக்கும் கண்ணாடி, சில சமயம்
பார்வையை மறைக்கும் கண்ணாடி
கண்ணை மறைக்கும் கருப்பை எடுத்துவிட்டு
என் கண்ணைப் பார்த்து பேசு உன்
காதலின் ஆழத்தை புரிந்து கொள்கிறேன்
பார்வையின் தூரத்தை சரி செய்ய
கண்ணாடி அணிவதில் தவறில்லை
பேதையின் பாகத்தை மறைந்து பார்க்க அணிவது தவறு
…
வண்ண வண்ண கண்ணாடிகள் திருவிழாவில் விக்குது
கருப்பு பச்சை சிவப்பு மஞ்சள் என காட்சிகளை காட்டுது
சிறுவர்களின் கலர் சேர்க்கை அறிவை வளர்த்தது
வயது ஏற ஏற நாகரீகம் என்று சொல்லி
கருப்பு வண்ண கண்ணாடி மட்டும் கண்களிலே நிக்குது
— அருள்மொழி மணவாளன்