வெள்ளை நிறத்தில்
பளிங்கு மாளிகை…
உன் இருப்பிடத்தில்
தங்கிச் செல்லா
உதரம் தரமானதாக
இருக்க முடியுமா?
கண்ணைக் கவர்ந்து
உமிழ்நீர் சுரக்கும்
உணவு வகைகள்
உலாச் சென்றாலும்
தெய்வத்தன்மை சுமந்த
திகட்டாத திரவியம்..
கால ஓட்டத்தில்
காணாமல் போகாமல்
பிரம்மனின் படைப்பிற்கு
பெருமிதம் தேடித் தந்த
கலை நீ…
ஆம்
காலை உணவின்
கலைஞன் நீ!
ஆதி தனபால்