நீ தரும் தேன் நீருக்கு
மொய்க்கும் ஈக்கள்
இன்று இல்லை
ஒன்றாக நீர் இரைத்து குளித்து
குடம் நிரப்பி
சோப்பு போட்டு சொலவடை பேசி கதைகளை கேட்டு
வானம் தரும் நீரை சேமிக்க
வர்ணம் போட்டு பூஜிக்க
சிறு சிறு பொருட்களை நீ சேமிக்க
அவற்றை நங்கூரமிட்டு காண்பித்த காலம் போச்சு
காணாமல் நீயும் போயாச்சு!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்