நெகிழி குழாய் துணையுடன்,
தன் இணையுடன்
குளிர் பானம் அருந்தி காதல் வளர்த்த தூதன்! பிளவையும் இனக்கமாக்கும் அன்பு குழாய்,
தாயாருக்கு தன் மகவுக்கு உணவு அருந்த உதவும் நண்பன்!
வானவில்லின் வண்ணங்களை
குழைத்து விதவிதமாக செய்து குழவிகளை கவர்ந்த புதுமுகம்!
பொக்கை வாய் குழந்தை முதல் கிழவர் வரை விரும்பும் இது இணையில்லா மனிதன் படைப்பே !!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: காதலின் துணைவன்
previous post
