வான் உச்சியில் நிலவன் இல்லை
இரவுப் பணிக்கு விடுப்பு விடுத்து
முகில்களுடன் கொண்ட ஊடலில் தன் பனி வதனத்தை இருளினால் மூடி கொண்டது..
வெட்ட வெளியில் மின்னும் விண்மீன்களும் இல்லை
தலைவன் இல்லா துக்கத்தில் துயில் கொள்ள விழி மூடிக் கொண்டது..
இரவின் நிழலுருவாய் தவழ்ந்து வரும் அடர்ந்த மரங்களின் கிளைகளின் மடியில் இளைப்பாறிய பட்சினங்களும் தங்கள் குஞ்சுகளை அணைத்து அரணாக படுத்துக்கொண்டது..
சாலையெங்கும் நிசப்தமே நிறைந்திருக்க அதனை விரும்பாத தேனீக்களின் ரீங்கார இசை இருளுக்கு பல்லவி பாடிக்கொண்டது..
எங்கும் பரவிய இருளின் மௌனத்தை சன்ன ஒளியில் ஒளிர செய்த வீதி விளக்கு இருளுக்கு மஞ்சள் பூசிக்கொண்டது..
இதை எதையும் கவனம் கொள்ளாது உன் அருகாமை தரும் இன்பத்துடனும்
உன் கைகளின் ஸ்பரிசம் தரும் சிலிர்ப்பும்
இரவு பனியை விட மனதை குளிர்விக்க
மஞ்சள் ஒளியில் நனைந்து
உன் கரங்களுடன் கைகோர்த்து நீண்ட பயணம் கதைகளை பேசிக்கொண்டு காதல் உலா செல்வோம் அன்பே
✍️அனுஷாடேவிட்