ஒரு தேவதையொருத்தி
என் காதல் கதையை கேட்டாள்.
சற்று அடைக்காத்திருந்த
மௌனங்களை கலைத்து விட்டு
உயிர் உருகி காதலித்த
ஒரு தலை இராகங்களை எல்லாம்
ஸ்ருதி மாறாமல்
சொல்ல மனமில்லாமல்
சொல்லி தொலைத்தேன்.
என் சோக கீதங்களை கேட்ட
அந்த இரசிகை
கதையின் முடிவில்
பழம்பெரும் நடிகை
ஊர்வசி போல்
சிரித்து தொலைத்தாள்-ஏனோ
கோபங்களுக்கு பதிலாக
என் மூக்கு கண்ணாடி பார்த்து புன்னகையித்தேன்?
அவள் தேவதை என்பதால் என்னவோ?!
-லி.நௌஷாத் கான்-