காதலிக்கும் போது காதல்பேசியாக இருந்தது இன்று மணமானபின்னே தொல்லைபேசியாக மாறிவிட்டது..
அன்று தொலைவில் இருந்தோம் பேசிக்கொண்டே காதல் பேசியில் அன்பை பகிர்ந்தோம்..
இன்று அருகில் இருந்தும் என்னை அணைக்காமல் அப்படி என்ன அந்த தொல்லை பேசியில் பார்க்கிறாயோ..?
அன்று என் சந்தோஷம் நீயே என்று உரைத்து விட்டு இன்று அருகில் இருந்தும் அலை பேசியை பார்த்து பேசுகிறாய் சிரிக்கிறாய்..
காதல் மறந்து விட்டதா..?
காதல் மரத்துவிட்டதா..?
காதல் மனைவி கசந்து விட்டாளா..?
✍️அனுஷாடேவிட்