காத்திருக்கிறேன் கண்ணாலனே
மனித உருவில் தான் எனை விரும்பவில்லை,
வெண் ஆவி
உருவிலாவாவது உனக்கு எனை பிடித்ததா?
பகலில் மரத்தில் தொங்கியும்,
இரவில் வீதி உலா வந்தும்,
உனை சேரத்துடிக்கும் என் அன்பு உன் கண்ணில் அல்ல, அல்ல, உன் கருத்திலாவது நிறைந்ததா?
உனை விரும்பியும் உன் உதாசினத்தால் உயிர் விட்ட என் ஆன்மா தினம் தினம் உனை அம்பகங்களில் நிறைக்க காத்திருக்கிறேன் நான்.
பேய் என மிரண்டாயோ?
பிசாசு என பயந்தாயோ?
எனக்கும் பயமே!
இரவில் தனித்திருக்க.
விலோசனங்களில் குறையா நீருடன் காத்திருக்கிறேன் என் கண்ணலானே….
சுஜாதா.
படம் பார்த்து கவி: காத்திருக்கிறேன் கண்ணாலனே
previous post