தலைவாழை
இலைச் சோறதனை
நினைவூட்டும்
சின்னமாய்
மூவர்ணக்கொடி…
கோட்டைகள்
வீடுகள் எங்கும்
பறக்கவிட்டு…
சட்டைப் பை மேல்
குத்துகையில்
இதயங்கள்
உணருமா….
பல காயங்களில்
பிறந்து…..
வந்தே மாதரம்
மந்திரம் தாங்கி
பயணித்த
சுதந்திரம்
இன்று தந்திரக்
காரியவாதிகள்
கைகளில் எடுப்பார்
கைப்பிள்ளையாய்!
நாபா.மீரா
