காற்றின் காதல்
பறப்பது
இறகுகளா இல்லை,
பறவையின் சிறகுகளா
என குழப்பத்தொடு
காற்றில் கரையும்
இறகு பந்தை காண்கிறேன்,
மெல்லிய மேனியின்
மேலே வெல்லை மயிர்கள்
படர்ந்து கிடக்க,
அதன் மேல்
காதல் கொண்ட
தென்றல் காற்று
அதனை தீண்டி செல்கிறது ….
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.