கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம்
புத்தியுடன் சத்தமின்றி காத்தால் நிரந்தரம் பார்க்காதே என்றும் தராதரம்
பெறலாம் நல்ல வாழ்க்கை தரம்!
நெற்றியில் வேர்வை சுற்றிலும் பார்வை முற்றிலும் தேவை அயராத உழைப்பு
இவையே உழைப்பாளியின் சின்னம்
தேவையே படைப்பாளியிடம் திண்ணம்!
காற்றிலே படபடக்குது மாடியிலே
பலரின் பார்க்க வைக்குது தேடியே! பள்ளியில் மழலைகள் கோடியும்
பார்க்க பட்டொளி வீசி பறக்குது கொடி!
ஆகஸ்ட் 15ம் பிறந்ததே
மக்கள் மனம் அடிமையை மறந்ததே
சுதந்திரம் பெற்ற திருநாளாம்
அதுவும் மக்களுக்கு ஒரு பொன்னாளாம்!
உஷா முத்துராமன்