காலணி என்று ஆதிக்கம் கொள்ளாது அழகுபடுத்தி பார்க்கலாமே !
நடக்கும் பாதங்கள் தேடி வந்த வெள்ளிச் சலங்கையின் ஒலி..!
வெள்ளைக் காகிதம்
காதலின்
கறை பட்டதும்
கவிதையாகும் விந்தை!
தேர்ச்சி எல்லைக்குள்
சிக்காத மாணவன்
சிக்கல்கள் தீர்ப்பான்
சம்பளம் அளக்கும்
படிவடிவில்…!
குடிசைவீட்டில்
குணங்களாய் நிறைந்திருக்கும் குழந்தைகள்!
எழுதப்படிக்கத் தெரியாத பாமரப்
பெற்றோரின் வளர்ப்பே… பொறுப்பான பதவிகளை அலங்கரிக்கும்..
அதிகார அதிகாரிகள்!
சேற்றிலே பூக்கும்
செந்தாமரையே
இறைவன் திருவடிகளில் மீண்டும் மலரும்!
உருவமில்லா காற்றையே
உணர்வாய் சுவாசிக்கும் உயிர்கள்!
காலணியிலும் காவியம் பிறந்தது!
பூக்கள் பூக்காதா ?
ஒதுக்கப்படும் …
இதுதானா என்ற
இழிவான
நினைப்புகளுக்கு..
சம்மட்டி அடி _இந்த
பூங்கொத்து!!!
✍🏼 தீபா புருஷோத்தமன்