ஒவ்வொரு புதிய காலையில்
பூக்கும் எனில்
அதில் மலர்வது மட்டுமல்ல இல்லங்களில் உள்ள சமையலறையில்
வெள்ளை வெளேரென்று
கொள்ளை கொள்ளும்
மணத்துடன் பூப்பது
மனம் தேடும் இட்லி.
தினம் சாப்பிட்டாலும்
குணம் மாறா நண்பன்
சட்னி சாம்பாருடன்
கிட்னியைக் காப்பான்.
இட்லி பொடி தடவ
அதிலும் பிணைந்து
சதியின்றி ருசி தருபவன்
உலகத்தில் மிக நல்ல
புலன்களுக்கு உற்சாகம் தரும்
களங்கம் இல்லா
காலை உணவு என
விளங்கியவர் உன்னை
விரும்புவர்…….
புலம்புபவர் உன்னை புறக்கணிப்பார்
உஷா முத்துராமன்