காவிக்கண்டு
காவிக்கண்டைப் பிடிக்காதவரை
தேடிப் பிடித்தலே அரிது!
குழந்தை முதல் பெரியவர் வரை மயக்குதும்
இதுவே!
என்னவள் வாயோடு
என்னை விட அதிகமாக உறவாடும்
இதைக்கண்டு பொறாமையில்
புழுங்கிய நான்
கையில் பட்டாலே உருகிடும் இதன் மென்மையில்
என்னவளின்
மென்மையாய்
உணர்கின்றேன்!
இனிப்பைக் கண்டு ஓடும் எம் முதுவயது
தோழனையும் விட்டு வைக்காதது காவிக்கண்டு! வெள்ளை நிறமானாலும்,
கருப்பு
நிறமானாலும்,
பழுப்பு
நிறமானாலும்,
பல்லைக் காட்டும் மானிட பிறவி!
காரணம் தேடி அலைவேன், என்னவளை
சந்தித்து காவிக்கண்டு கொடுத்து, அவளின் வாயில் வழியும் இதைத் துடைத்துவிட
அவள் மென்மையில்
கரைந்துவிட!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: காவிக்கண்டு
previous post