கந்தையானாலும் கசக்கி கட்டுவது
வறுமையிலும் சுத்தம்
கிழிந்த துணியை வாங்குவது
செழுமையின் உச்சம்
கிழிந்த துணியை உடுக்க தரித்திரமென
பெற்றோர் திட்டிய காலம் தாண்டி
கிழிந்து தொங்கும் துணியை
விலை கொடுத்து வாங்கி அணிவது
நாகரீக காலமாகியது
— அருள்மொழி மணவாளன்