குங்குமக் கனவு
சிவப்பு அபாயத்தின் அடையாளம்!
ஆனால்,
தாலியும்,
மஞ்சளும், குங்குமக்கனவு காணும் முதிர்கன்னி
சொல்லுவாள், சிவப்பு
காதலின்,
அன்பின் அடையாளம் என்று.
காதலின் படிநிலையில் குடிக்களைத்த மனையாட்டியின்
நெற்றியில் கலைந்த,
குங்குமம் சொல்லும்
அவர்களின் காதலின் அளவை!
வெட்கத்தில் சிவக்கும் அவளின் மேனியின் பளபளப்பு குங்குமத்தையும் தோற்கடிக்குமே!
நெற்றிக் குங்குமம் மங்கலத்தின் சின்னம்,
மகாலட்சுமியின் அம்சம் என்பர்.
இழந்த இழப்பை தாண்டி வாழ நினைக்கும்
அம்பகங்கள் நனைந்த கைம்பெண் சொல்லுவாள்,
குங்குமம் தொடக்கூடாத நிலையிலுள்ள
தொடு வானம் என்று…
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: குங்குமக் கனவு
previous post