திராட்சை ரசம் உயர்குடி ஆடம்பர ரசம்!
அழகை மெருக்கெற்றிய
சிவப்பு நொதி, விழாக்கால பழக்கமாகி,
நடுத்தர மக்களின் வலிநிவாரணியாகி,
ஏழ்மையின் நிரந்தரமான பழியானதேனோ?
குடி குடியை
கெடுத்து வாழ்விழக்க வைத்தும், திருந்தாத பாமரனை உருவாக்கித்தரும் சமூக அரசியலை
என்னவென்பது?
கண்ணிருடன் காலம் தள்ளும் தாயாரின் ஓலம் கேட்க யாருமில்லையா?
ஓளஷதமாக வேண்டியது விழமாகி போனதேனோ?
உடல் நலத்துடன் மனநலம் காக்க குடி அரக்கனை ஒதுக்குவோம்
நாட்டை விட்டு விரட்டுவோம்!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: குடி எவ்வாரகினும் குடி
previous post