மஞ்சள் பூசிய
உன் திருமுகத்தை
காண வைத்தது
யார் குற்றம்?
கண்களிலிருந்து
காதலை பிறக்க வைத்தது
யார் குற்றம் ??
செவிகளில்
ரீங்காரமாய் -உன்
குரலை ஒலிக்க வைத்தது
யார் குற்றம் ???
மொழி பேசும்
உதடுகளில்
உன் பெயரை
உச்சரிக்க வைத்தது
யார் குற்றம் ????
மீசையோடு -உன் மேல்
ஆசையையும்
வளர வைத்தது
யார் குற்றம் ?????
இதயம்
ஆக்ஸிஜனை சுவாசித்ததை விட
உன் நினைவுகளை
சுமக்கும் படி வைத்தது
யார் குற்றம் ??????
-லி.நௌஷாத் கான்-