காலை நேர பணிச் சுமையை குறைக்க உதவும் பெட்டி
இரவு நேர குல்ஃபி ஆசையை தீர்க்க உதவும் பெட்டி
திடீர் விருந்தினரை சமாளிக்க உதவும் பெட்டி
திருடி தின்ன பண்டங்கள் ஒழிந்து இருக்கும் பெட்டி
வெயிலின் வெக்கைக்கு இதமாக குளிர் நீர் தரும் பெட்டி
வேண்டா பொருள் பலவும் உள்ளே இருக்கும் பெட்டி
வேண்டிய முக்கிய பொருளாய் ஆகிவிட்ட பெட்டி
— அருள்மொழி மணவாளன்.