முப்பது நாட்களாலும் வைத்தது போல் இருக்கும் தக்காளி
என்ற விளம்பரத்தைக் கண்டு வாங்கி மகிழ்ந்தோம் குளுகுளு பெட்டியை
மூன்று நாட்கள் ஆயுட்காலம் உள்ள தக்காளியை
முப்பது நாட்கள் புதிதாய் வைத்திருத்தல் நலமா என்று யோசிக்காமல்
பால் கெட்டுப் போகிறது
மாவு புளித்துப் போகிறது
வேண்டும் ஒரு குளுகுளு பெட்டியென்று
அடம் பிடித்து வாங்கிய பிறகு
பாலும் மாவும் மட்டுமா இருக்கிறது?
மீன் குழம்பு வேண்டுமா?
கறி குழம்பு வேண்டுமா?
சாம்பார் வேண்டுமா?
வத்தக் குழம்பு வேண்டுமா?
எது வேண்டும் என்று சொல்லுங்கள் எடுத்து சுட வைத்து தருகிறேனென்று மனைவி சொல்லும் நகைச்சுவை
பார்த்து சிரிக்கும் போது
நாவின் சுவையை தொலைக்கின்றோம் என்று
உணர மறுக்கின்றோம் இன்று
குளுகுளு பெட்டியை அத்தியாவசியத்திற்கு பயன்படுத்தி
அன்றாடம் கிடைக்கும் காய்கறிகள் வாங்கி
அருமையாய் சமைத்து ஆரோக்கியமாக வாழ்வோம்
— அருள்மொழி மணவாளன்.
