தொலைந்த பொம்மை தேடி விழிகளில்
அரும்பி வழியும் நீருடன் மேகத்தின்கண்
விழும் மழைத்துளிகளும் சங்கமிக்க…தன்
பாதை தொலைத்த பேதைக் குழந்தை…
மழையில் முளைத்த காளானாய்…கையில்
மஞ்சள் மலர்க்கொத்துடன் திடீரெனத்
தோன்றிய கரடி பொம்மை கண்டு
மின்னல் கீற்றாய்ப் பரவசம் விழிகளில்…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: குழந்தையும், பொம்மைக் கரடியும்
previous post
