பெருங்கடலில் மிதக்கும் பனிமலை போல,
அலைகளற்ற அமைதி கொண்ட உள்ளமே.
மனதின் ஆழத்தில் அடங்காத கவலைகளும்,
மௌனமான உணர்வுகளும் சேர்கையில்.
அலைகள் அடித்து அலைக்கழிக்கையில்,
ஒளி வீசும் மனமும் இருளடைகிறது.
யாரோ ஒருவர் உள் புகுந்து,
குழம்பிய மனதை சுத்தப்படுத்துகிறார்.
மாப் வாளி, சோப்புடன்,
கழிவுகளை அப்புறப்படுத்துகிறார்.
மௌனத்தின் புழுதியை அகற்றுகிறார்,
கண்ணீரைக் கழுவுகிறார்.
அழுத்தத்தின் நிழலை விரட்டுகிறார்.
துன்பங்களின் சுவடுகளை அகற்றுகிறார்.
மனதின் ஒளியை மீட்டெடுக்கிறார்.
ஒளிமயமான மனம்,
மனதின் இருளை நீக்கி,
முன்னோக்கி செல்கிறது.
இ.டி. ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: குழம்பிய மூளையை சுத்தப்படுத்துகிறார்
previous post
