கேனிலும் பாட்டிலிலும் வருமுன்
அடிபம்பில்
குழாயில் தாராளமா
வந்தது….
முற்கால இல்லங்களில்
கேணியே பிரதானம்.
துவைத்தல்
தேய்த்தல்
குளித்தல்….
ஆரோக்கியம் காத்தது.
மழை நாளில்
மொண்டு எடுக்கலாம்
தழும்பி நிற்கும் நீர்..
இறைக்க இறைக்க
ஊருமாம் கிணறு..
படிக்க படிக்க
ஊருமாம் அறிவு…
இன்று, அந்நாள்
ஞாபகச் சின்னமாய்
இந்தக் கிணறு!
S. முத்துக்குமார்
