என் நேசத்திற்கு உரியவனே…
நேசம் என்பது என்ன..?
என்னவன் எப்படி இருப்பினும்
மரணம் வரை
விரும்புவேன் என்பதல்லவா…
அழகு .. பணம் .. வீண்
நற்குணத்தை பார்த்தல்லவா
என்னவனை விரும்பினேன்…
இன்ப அவஸ்தை
தரும் காத்திருப்பு..
உன் அருகாமை தரும்
இதமும் நிறைவும்..
காதலை தவிர
வேறெங்கு கிடைக்கும்..?
ஊடலில்லா காதலுண்டோ..?
ஊடலும் சண்டையும்
ஒருவரையொருவர்
புரிந்து கொள்வதற்கே…
ஏழேழு ஜென்மம் வேண்டாம்..
இந்த ஜென்மமே
உன் மொத்த வாழ்விலும்
நான் மட்டுமே காதலாக
வாழ வேண்டும்..
உனை கைப்பற்றிடும் வரம் வேண்டும்..
காதல் தரும் பேரின்பம்
இப்பிரபஞ்சத்தில்
வேறுண்டோ…?
உன் வாசத்தை
காற்றில் தேடி
என் சுவாசம்
ஏக்கம் கொள்கிறதடா..
நாட்களை நீட்டிக்காமல்
கைகோர்த்து காதல் தேசம் செல்வோம்
வா நேசமன்னனே…..!
அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)