கைதாகிப்போன விரல்கள்
விடுதலை பெற்று
எழுத்தெனும் வீணையை
மீட்டச் செய்து
மீண்டும் மீண்டெழுந்து
நாளொன்றின் நேரத்தில்
அரூபியெனும்
அவதாரத்திற்குள் அடியெடுத்து
சிந்தனைக்குள் எட்டியதை
எப்படியாவது
எட்டிப் பிடித்து
அன்றைய தினத்தில்
என்னை எனக்கே
அடையாளம் காட்டிய
அகராதி!
ஆதி தனபால்