படம் பார்த்து கவி: கைம்பெண்

by admin 2
66 views

கைம்பெண் இவளென
காரியம் செய்திட
இரத்த கரை என எண்ணி
பலர் சேர்ந்து
துடைத்திடும் செந்நிறம் -நீ

தபுதாரன் இவரென கூற
மறையோடு இணைந்த
சான்றோர் மறந்திட்ட
மேம் பொருள் -நீ

அக்னி சாட்சியாய் மங்கை
நுதல் தீண்டி
அவன் தேகமோ அக்னி உண்டிட
அழிந்திடுவாய் -நீ

இளவெயினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!