கறை படாத கைகள்
என்று கதைவிடும்
கரை வேட்டிகளுக்கு
தேவைப்படும் கையுறை..!
கருப்புப் பணத்தை
கடத்திச் செல்லும்
கயவர்களுக்கு
தேவைப்படும் கையுறை ..!
பாமர மக்களின்
பணத்தை கையாடும்
கள்வர்களுக்கு தேவைப்படும்
கையுறை..!
நயமாய் பேசி
நயவஞ்சகமாய் கொல்லும்
நன்றி கெட்டவர்களுக்கு
தேவைப்படும் கையுறை..!
ஷே.சாகுல்அமீத்
🙏