கொவிட் நேரம்
உனது அருமை
எமக்கு புரிந்தது
அந்த நேரம்
எம்மை வாயால்
சுவாசிக்கவிட்டு
வேடிக்கை பார்த்தாய்
செயற்கை சுவாசத்தை
விருப்பத்துடன் எடுத்து
கொன்டாய்
எமக்கோ செலவுகள்
அதிகரித்து சென்றன
விதம் விதம்மான
ஊசிகள் உடம்பில்
ஏற்றினாலும்
உன்மூலம் சுவாசிக்க
முடியாத நிலையினால்
பல ஆயிரம் ஆயிரம்
உயிர்கள் பலி போனதே
உயிர்களின் உயிர்ப்பை
உனர வைக்கும்
உறுப்பு நீ
வேறு உறுப்புக்கள்
மூடினால்
அது வேறுகதை
நீ மூடினால்
எமது கதையே
முடிந்தது
ஆதலால்
முறையான
சுகாதார முறையை
கடைபிடித்து
உன்னைகாத்து
எம்மை
காப்போம்…
M. W Kandeepan 🙏🙏