காலமகளின்
வரலாற்றுப் பக்கங்களில்
உனக்கெனத்
தனியிடமொன்றுண்டு..
ஆதி மனிதனின்
ஆளுமையில்
அவதரித்த
சக்கரத்தின்
வட்டச் சுழலில்
மையம் கொண்டு
மெழுகென உருமாறிய
மண்ணைப்
பதமாய்
பக்குவமாய்
குயவனின்
கைக்கணக்கில்
உபகரணமே இல்லாமல்
வடிவியலானாய்
கோடையின்
விடியலானாய்!
ஆதி தனபால்
