கோபம் துறக்க ஆசை //
குரோதம் துறக்க ஆசை //
விரோதம் துறக்க ஆசை //
பாவம் துறக்க ஆசை //
கவலை துறக்க ஆசை //
பயம் துறக்க ஆசை //
ஆசை ஆசை ஆசை //
அத்தனைக்கும் ஆசை படு //
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று அரக்கனுக்கும் உபதேசிக்கும் புத்தன் //
எதை என்று தெளிவாக புரிந்து கொண்டால் மனிதனாகலாம் //
புரிந்ததை செயல்படுத்தி வாழ்ந்தால் புத்தன் ஆகலாம் //
- அருள்மொழி மணவாளன்