புவனத்தைச் சுற்றி
கவனத்தை ஈர்க்கும்
கோள்களிடம் நம்
கேள்விகளை பல
வேள்வி செய்து
தோல்வி வேண்டாம்
வெற்றியை மட்டுமே
பற்றுள்ள வாழ்வில்
சுற்றி வந்து தா
என வினவினாலும்
நம் விதி ஏற்கனவே
“தம்” பிடித்து எழுதப்
பட்டது என உரைக்கலாம் நல்லவற்றை மட்டுமே
கள்ளத்தனமின்றி செய்தால்
வெல்ல வாய்ப்பினை
கோள்கள் தருவதோடு
தோள் கொடுத்து உதவுமென
மாறா நம்பிக்கையோடு
தீரா முயற்சி செய்வோம்!!
உஷா முத்துராமன்