கோள்கள்….
நம்மிலும்….
பெருங்கோள்கள்
ஒன்பதாம்…
ஒவ்வொன்றும்
ஒரு பாதை…
ஒரு நிறம்…
ஒரு வடிவம்…
அதனதன் பாதையில்
பயணிக்கும் வரை
வான்வெளியில்
தொடரும் பயணம்..
தொட்டு விட்டாலோ
தூளாகி சிதறும்…
மனித மனங்கள்
ஆயிரம் வடிவில்..
அதனதன் பாதையில்
சீறாய் போனால்
போரும் இல்லை..
உரசும் போது
சிதறல் வருது…
கோள்கள் சொல்லுது
அவரவர் பாதை
அடுத்தவரை
பாதிக்காதே… என்று.
S. முத்துக்குமார்