சூரியனே!
நீ ஆணா? பெண்ணா ?
நீ ஆண் என்று
நினைத்ததனால்
அனைத்து கன்னிகளும்
உன்னைச் சுற்றுகின்றனவா..?
இல்லை.. இல்லை..
நீ பெண்ணென்று நினைக்கின்றேன்.!
அதனால் தான் எத்தனை கள்வர்கள்(கோள்கள்)
உன்னைச் சுற்றினாலும்
நெருங்க விடுவதில்லை ..!
நெருங்கினால் சுட்டெரித்து
விடுவாய் என்று
எவரும் உன்னை தொட முயல்வதில்லை ..!
எவ்வளவு நாள்தான்
கன்னியாய் இருப்பாய் ..?
பூமியை மட்டும்
காதலனாய் கட்டிக்கொண்டு
மற்றவர்களை கழட்டி விடலாமே..!
ஷே.சாகுல்அமீத்
🙏
