அம்மாவுக்கு சமையல் அறையில்
அப்பாவுக்கு புத்தகம் அடுக்க
தாத்தாவுக்கு மருந்து வைக்க
பாட்டிக்கு பூஜை பொருள் வைக்க
அக்காவுக்கு துணி அடுக்க
தம்பிக்கு பொம்மை வைக்க
தங்கைக்கு வளையல் பொட்டு வைக்க இல்லத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும்
சகல வசதிகாரி
நீ பயன்படுத்த எளிதானவள்
உன்னை விரும்பாதோர்
உலகில் உண்டோ?…….
அன்று இரும்பில் பீரோ
இன்று மரத்தில் விரும்பிய வண்ணத்தில் கிடைக்கும்
அழகு பதுமையே வருக
எங்கள் இல்லத்தில் அமர்ந்து அனைவரையும் மகிழ்விக்க
வருக…வருக….வருக…..
உஷா முத்துராமன்