வெட்ட வெளிதனில்
கானகப் பாதைக்குள்
வெட்கித் தலைகுனிந்து
எதிரில் எவருமில்லா
ஆளரவமற்ற இடம்
தேடியலைந்த காலங்களுக்கு
கால்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்து
புதுத்தெம்பைத் தந்து
மாதம் ஒரு முறை
சுழற்சியாய்
சுழன்றாலும்
மனவலியின் காயங்களுக்கு
மருந்தாய் வந்து
உணர்வுகளைக் கொதிகலனிடாமல்
மதிப்பாய்
வலம் வரும்
சத்தமில்லா சுத்தம் நீ!
ஆதி தனபால்