சத்தியமாக,
நிச்சயமாக
அடித்து சொல்வேன்
நீ உலக அழகி இல்லையென்று!
இருந்தும்
இடைவிடாது
இம்சை படுத்துகிறது
உன் கொள்ளை அழகு!
சிறு வயது முதல்
சிர்மா இட்ட விழிகளில்
சிலாகித்த எனக்கு-உன்
மை இட்ட கண்களை கண்டவுடன்
கவிழ்ந்து போனேன்.
பிறை நிலா
நெற்றி கண்டவன்-உன்
குங்கும பொட்டு நிலாவில்
ஒட்டி போனேன்.
உன் முட்டை கண்களில்
உடைந்து போனது
நானோ!
ஏனோ?
சூரியனும்,சந்திரனும்
ஒரு போதும்
ஒன்றிணையாது என்பதை
நானறிவேன்
இருந்தும்
உன் நினைவலைகள்
கடல் அலையாய்
ஓயாமல்
அடித்து கொண்டே இருக்கிறது
என்னுள்.
காதலில் ஜெயிக்க
நான் கதாநாயகனும் இல்லை
வாழ்க்கையொன்றும்
சினிமாவும் இல்லை
எத்தனை அறிவியல் வந்தாலும்
இந்த சமுதாயம் ஒரு போதும்
மாறப் போவது இல்லை-இருந்தும்
மனிதனாய்
வாழ ஆசைப்படுகிறேன்
காதலை தொலைத்த பிறகும்
காதலோடு!
-லி.நௌஷாத் கான்-