வண்ணமயமாய் வானெலாம் ஒளிர்ந்திடினும்
எண்ணமேனோ நிலவினையே நாடிடுதே
பிறை மதியென சிறுவொளியாயினும்
நிறையொளிதரும் முழு மதியாயினும்
பிற ஒளியிலிலா பேரின்பம்
பிறை ஒளியிலும் பெற்றேனே
மறைமதியிலும் மனம் முழுவதும்
நிறை ஒளியின் நினைவுகளே
விண்ணிலுள ஒளி எதுவாகினும்
எண்ணிலடங்கா ஒளியது உமிழ்ந்தாலும்
சந்திர ஒளி போல்
சொந்தமென சிந்தை நிறையுதில்லையே
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
ஜே ஜெயபிரபா