நெருப்பு குண்டலத்தில் தான் குதித்து
நிறத்தை தான் நீ
மறந்து
கங்கென காற்றில் தான் பறந்து
கணகண நீ எறிய
வறுமை கொண்ட வீட்டிலியே வாழ தான் வந்து
சலவை காரர்கள் கொண்டாட
சலிப்பேதும் ஏதும் நீயும்
கொண்டதில்லை
அடுக்கு மாடி வசித்தாலும்
அடுபங்கரைகளை தாண்டுவதில்லை
சாக்கோல என்ற பெயர் கொண்டு
சகல பொருட்களிலும்
கலப்பதுண்டு
புகைத்ததால் சாம்பலாய் வெளிவந்து
புழு, பூச்சிகளை அழிகிறாயே
இயன்றவறை உனை தந்து
இயல்பாய் நீயும் இருக்கிறாயே
கருப்பாய் நீயும்
இருப்பதாலே
கவனிப்பாற்றி கிடக்கிறாயோ!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
