படம் பார்த்து கவி: சித்திரப் பார்வையே

by admin 1
20 views

சித்திரப் பார்வையே
சித்து விளையாட்டு ஏனடி ?
சின்னப் பையன் நானடி
செத்துப் போவேன் பாரடி ?
ஒத்தப் பார்வை
வேட்டையெல்லாம் வேணாம்டி -என்
முத்தக் கோர்வை
சேட்டையெல்லாம் கேளடி !
உன் தாவணி மடிப்புலத் தான் மயங்குறேன்
என் பாம்பாட்டமாக்கி மகுடியத்தான் ஊதுறே !
நீ கோலம் போடும் அழகுல
காலமெல்லாம் வாழுறேன்
ஒரு வார்த்தை சொல்லுடி
ஓடி வந்து தாலியத்தான் கட்டுறேன்
உனக்காக வேலியத்தான் மாறுறேன் !

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!