சிந்தாமல் சிதறாமல்
நீர்த்துளிகளைத்
தொண்டைப் பாதைக்குள்
பதமாய் அனுப்பும்
உனது
அன்பிற்கு
அடைக்குந் தாழில்லை…
உதடுகுவித்து
உறிஞ்சும் போது
கண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்
முடித்துக் காட்டி
உனைப் போல்
உழைக்க யாரால் முடியும்?
ஊதுகுழலால் ஊதி ஊதி
நெருப்பைப் பெருக்கினான்
ஆதி மனிதன்…
நீயோ
நீர் பானம் அருந்த
சிறு குழலானாய்!
ஆதி தனபால்
