மூன்று நாட்கள் தீட்டென ஒதுக்கி வைத்தார்கள்…
தனி படுக்கை,தனி உடுப்பு, தனி உணவென நவீன தீண்டாமை.
ஓய்வுக்கான நாளில் கூட ஓயாமல் வேலை
என் வீட்டில் அந்த நாட்களில் கட்டிப் போடா நாய் என என்னை நானே அழைத்ததுண்டு…
சிறகு விரித்து பறந்து போவென கிடைத்தது நாப்கின்..
சிறகு விரிக்க ஒரு ஆசை…
அஞ்சி வாங்க வேண்டிய மது ஆடம்பரமாய் அவசிய தேவைக்கான நாப்கின் இன்றும் பழைய செய்தி தாளில் சுற்றியபடி இன்னும் வளராத நாகரீகம்…
முதல் கூச்சம், முதல் வெட்கம், முதல் தயக்கம் காதலை சொல்வதில் மட்டுமல்ல நாப்கின் வாங்கும் போதும் தான்…
பெண்களை முன்னிறுத்தி ஒரு மாய வியாபாரம்… சிறகினை விறி உயரப் பறவென…கட்டுப்படா உதிரப்போக்கை கொண்டவள் சிரித்துக் கொண்டாள் அன்றாட அலுவலே அல்லாட்டம் இதில் பறப்பது வேறா என
மூன்று நாட்கள் வலி என்றாலும் அதும் சுகம் தான்… எந்த ஆணும் என்னை விரும்ப மாட்டான்… எனக்காக காத்து இருப்பான்…கொஞ்சம் திமிர் ஏறும். ஏறட்டும் அதனால் என்ன சிவப்பு விளக்கு பகுதியின் சுதந்திரம்…
உன் கஷ்டம் புரியும் என கை கோர்த்து நெற்றி முத்தம் தரும் கணவன்… மளிகை சாமானில் sanitary pad வாங்கும் மாமியார் வேற ஏதும் தேவையா எனக் கேளாமல் நீயும் வா எனக் கூறும் குடும்பம். அன்று மட்டுமாவது குறும்பு செய்யா குழந்தை எனக் கிடைத்தால் அந்த நாளும்திருநாள் தான்…
கங்காதரன்