1.சிறு சிறு சண்டைகளால் அணைத்து வைக்கப்பட்ட செல்பேசிக்குள் எத்தனையோ மனிப்புக்களும், தவிப்புகளும் அதனூடே உறங்கி இருக்கின்றன…
எத்தனை விசும்பல்கள், கோவங்கள், வார்த்தைகள் ஏன் சில நேரங்களில் வெட்கப் பட்டு தந்த முத்தங்களைக் கூட வெட்கப் படாமல் பெற்றுத் தந்து வெட்கப் பட வைத்திருக்கும்…
ஒரு இனம் புரியா தவிப்பினை எப்போதும் விதைத்து விடும் அணைத்து வைக்கப் பட்ட செல்பேசி…
- உன் குரல் ஓசை பதிவதால் எனக்கு உயிரோசை தருகிறது இந்த செல்பேசி…
- உன் அழைப்புக்கள் ஏதும் வருமா என பார்த்துக் கொண்டே இருக்கிறது என் மனசு… எல்லாம் இந்தக் காதலை சொன்னதால் தான்…
- உன் பெயர் தாங்கிய குறுஞ் செய்தியும், உன் பெயர் கொண்ட அழைப்பும் என்னையும் என் செல் பேசியையும் உயிர்ப்பித்தே வைக்கின்றன…
- சண்டையோ சமாதானமோ, கெஞ்சலோ கொஞ்சலோ, கட்டளையோ, அக்கறையோ, எதுவோ,ஏதோ எப்படியாகினும் அழைத்துவிடு எனக்கும் என் செல் பேசிக்கும் உயிர்கொடு…
கங்காதரன்