என்னவனே…
எத்தனை முறை
உன் கைகளால்
என்
உச்சி வகுட்டில்
குங்குமம் இட்டாலும்,
என் உடல்
சிலிர்க்கிறது
நம் காதல் வாழ்க்கை
கை கூடிய
இன்பத்தில்….
அதே குங்குமத்தை
நம் காதல் பொழுதுகளில்
உன் மார்பில்
வாங்கிக் கொள்ளும்
போதோ
அந்த குங்குமும்
வெட்கத்தில்
இன்னும்
சிவக்கிறது
நம் காதலின் ஆழத்தில்….
🩷 லதா கலை 🩷