அடுக்கி வைச்ச முத்து
அவிச்சி திண்ணா சத்து
பொறிச்சி திண்ணா கானு
அரைச்சி வைச்சா மாவு
சுற்றுலா இடத்தில தீனி
வாங்கி தின்னா ஜாலி.
தீயிலி போட்டா வெடிக்கும்
பாயில் பண்ணா ருசிக்கும்
செவப்பு கொண்டக்காரி
ஸ்வீட் கார்ன் வேற பேரு
பேபிகார்ன்னு சொல்லி
விலையை கூட்டு வாங்க பாரு
சத்து மிக்க பொருளுங்க
சந்தோசமா வாங்குங்க!!!
கவிஞர் வாசவிசாமிநாதன்
