சுளை சுளையாய்
வடிவேற்ற விரல்கள்
அனலிலோ அசுத்தத்திலோ
சுகம்கெடாதிருக்க
சுற்றி அணைத்து
சுகம் காக்கும்
கையுறையாய்
பொக்கிஷக் கீற்றுக்குள்
புதைந்து கிடக்கும்
மணிமுத்து மனம்தனை
எதிரெண்ணம்
அழுக்காறு அண்டாது
நேர்மறை எனும் உறை
தரித்து தடுத்தால்
சுகமான சுகந்தம்
மனதின் சுகத்தினை
என்றென்றும் காத்திடுமே!
புனிதா பார்த்திபன்