சுடுகாட்டின் எரியூட்டிய புகை
சுற்றிலும் சூடான வாகனப்புகை
சுறுசுறுப்பாக்க சோம்பேறியாக
நல்லதுக்கு கெட்டதுக்கு சிந்திக்க
இப்படி எதெதற்கோ மக்கள்விடும்
வெண்சுருட்டின் ஆலகாலப்புகை
தம்மையும் சூழலையும் அழித்துக்
கொள்ளும்(கொல்லும்) புகை,,,
நாம் உபயோகிக்கும் பலபொருட்களை
உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின்
இடைவிடாத நச்சுப்புகை,,
குப்பை எரியூட்டும்போது
வெளியாகும் நெகிழிப்புகை
இன்பமோ துன்பமோ
வெடிவெடித்துக் கொண்டாடும்
வெடிமருந்துப் புகை,
நல்லதொரு துவக்கத்திற்கு
நாடெங்கும் ஹோமப்புகை,,
பிரபஞ்சம் நமக்களித்த பல
அழகை அழித்துவிட்டோம்!
பூமியைச் சுடவைத்து சுடவைத்து
வாழ்வைச் சுவைக்கிறோம்!
ஓசோன் மண்டலத்தையே
ஓட்டை போட்டாலும், நாம்
விடும் புகை மட்டும் ஓயவே இல்லை,,,
புகை எங்கெங்கும் புகை,,
புகையில் பல வகை…
எதுவாயினும் நமக்குப் பகையே!
மு.லதா
படம் பார்த்து கவி: சுடுகாட்டின்
previous post