சிவப்பு வண்ணத்தின் மீது
உவகை அதிகமானதால்
வீட்டில் வளர்த்தேன்
அழகு செடியை
பழகி தினம் பாடி
உனக்கு நீர் வார்த்ததில்
எனக்கு கிடைத்தது
செக்க சிவந்த
எக்கச்சக்கமான செம்பருத்தி
மலர்………. உன்னை
பார்த்தாலே பரவசம்
சோர்வை போக்கும்
நீ எனக்கு உசத்தியே…
ஒரு நாள் மட்டுமே மலர்ந்து
திருநாளாக ஜொலிக்கும்
உன்னிடம் வாடினாலும்
சோர்ந்து போகக்கூடாது
என்ற பாடத்தை கற்றேன்
பாடம் சொன்ன நீ
உசத்தியான குரு தான்!
உஷா முத்துராமன்