செம்புயல் பெயல் நீர் போல் ஒன்றாய் கலந்ததே நம் காதல்…
நம் காதலை ஏற்றுக் கொள்ளவே நம் இருவீட்டாரின் மனங்களிலும் பெரும் மோதல்..
சாதி இரண்டொழிய வேறில்லை
மதம் வளர்ந்தால்
படுபாழாம் பகுத்தறிவு என்றனர் நம் முன்னோர்…
சாதி ,மதம் என்ற இரு போர்வைக்குள் சிக்கித்தவிக்கும் நம் காதலை
சேற்று மண்ணிலேயிட்டு புதைத்தது விட்டனரே நம் வீட்டார்…
என்றுதான் சாதிமதம் என்ற தீ அணையுமோ
அன்றுதான் பல நெஞ்சங்களின் காதல் தீபம் சுடர்விட்டு எறியும்…
ரஞ்சன் ரனுஜா