செல்லும் இடம்தேடி
சேர வைத்தாலும்
போகும் இடமெல்லாம்
போதை பொருள்தான் நீ.
எமனைக்கூட
வீட்டுக் கழைத்து
விருந்து வைத்து விடுகிறாய்.
வயிற்றுப் பசிக்கு
வாயை கட்டினாலும்- உன்
பசிக்கு உயிரை விடுகிறோம்.
மறக்கவும் முடியாமல்
மன்னிக்கவும் முடியாமல்
மனமின்றி மட்டுமல்ல
பணமின்றியும் வாழ்கிறோம்.
செ.ம.சுபாஷினி